ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்!

நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்!

ரிஷப் பண்ட் அடுத்த ஆறு வாரங்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்! இதனால் நாலாவது டெஸ்ட் மற்றும் ஐந்தாவது டெஸ்டில் அவர் ஆட மாட்டார் என்று தெரிகிறது!

ரிஷப் பண்ட் காலில் பந்து தாக்கியதால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகவே வாய்ப்பு உள்ளது!

ஐந்தாவது டெஸ்டில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது!

துருவ் ஜூரல் முதன்மை விக்கெட் கீப்பராக தொடர்வார்!

மருத்துவ விஷயங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, தேவைப்பட்டால் அவர் நடைபெற்று வரும் டெஸ்டில் பேட்டிங் செய்யலாமா என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும்!

ஆனால் காயத்தோடு நின்று பேட்டிங் செய்வது கடினம் என்பதால் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் வாய்ப்பு குறைவே!

இதுகுறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நினைக்கிறேன்!

வெளிநாட்டு மண்ணில் 1000+ டெஸ்ட் ரன்களை எடுத்த ஒரே விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளை தவற விடுவது அவருக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் பெரிய இழப்பாக இருக்கும்!

இந்த தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை 462 ரன்கள் குவித்து உள்ளார்!

#RishabhPant #TeamIndia #INDvsENG #indvsengtest2025 #testcricket #tat2025 #wtc2025to2027 #CricketLovers

Previous articleநான்காவது டெஸ்டில் இருந்து ஆகாஷ் தீப் நீக்கம்
Next articleவாய்ப்பு பெறும் துருவ் ஜூரேல் …!