கண்ணீர் சிந்திய ஹர்திக்.. ரோஹித் சர்மாவுடன் சதி செய்யும் 2 வீரர்கள்.. அரசியலால் தோற்கும் மும்பை அணி!
மும்பை அணியின் தொடர் தோல்விக்கு சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவருமே காரணம் என்று ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.
சிஎஸ்கே அணியை போல் பலவீனமாக இருந்து தோற்றாலும் கூட ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மும்பை அணி இந்திய அணியின் பாதி பிளேயிங் லெவனே மும்பை அணியில் தான் விளையாடி வருகிறது. இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய டி20 அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் திலக் வர்மா ஆகியோர் இருக்கிறார்கள்.
மும்பை அணியின் பலம்
அதுமட்டுமல்லாமல் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா ஆகியோரும் மும்பை அணியில் இருக்கிறார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் போல்ட், வலது வேகப்பந்துவீச்சாளர் சஹர், இங்கிலாந்து அதிரடி மன்னன் ஜாக்ஸ் ஆகியோரும் இருந்து மும்பை அணி தோல்வியடைவதுதான் ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
ஜெயவர்தனே வந்தது ஏன்?
கடந்த சீசனிலேயே ஹர்திக் பாண்டியாவின் தலைமையை ஏற்க முடியாமல் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரும் தனித்து இருந்தனர். மும்பை அணியின் முகாமில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா கீழும், வெளிநாட்டு வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழும் செயல்பட்டு வந்தனர். இதனை கலைவதற்காகவே பயிற்சியாளராக ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டார்.
மும்பை சிக்கல் தொடர்கிறதா?
ஆனாலும் மும்பை அணிக்குள் நீடிக்கு வரும் பணிப்போர் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் ரோஹித் சர்மா நீக்கப்பட்ட போட்டியில் திலக் வர்மா கடைசி வரை பேட்டை ஓங்கவே இல்லை. இதனால் வேறு வழியின்றி திலக் வர்மாவை ரிட்டையர்ட் ஹர்ட் செய்து வெளியேற்றினர். அதேபோல் கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி மும்பை அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தினார்.
திலக் வர்மா செய்த சேட்டை
ரோஹித் சர்மாவின் முக்கியமான தளபதிகளில் ஒருவர் திலக் வர்மா. அவர் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அவரின் நண்பர்கள் ரோஹித் சர்மாவுக்கு சல்யூட் அடித்து வரவேற்பு அளித்தனர். அந்த கும்பலில் திலக் வர்மாவும் இருந்தார். அதேபோல் ரோஹித் சர்மாவுடன் கடந்த சில ஆண்டுகளாக அதிக நெருக்கம் காட்டி வருவது திலக் வர்மா மட்டும்தான்.
தலைமை பஞ்சாயத்து
இதனால் ஹர்திக் பாண்டியாவின் தலைமையை இந்த சீசனிலும் ஏற்காமல் 3 வீரர்களும் சேர்ந்து மும்பை அணியை தோல்வியடைய வைப்பதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ரோஹித் சர்மா பெரும்பாலான போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராகவே விளையாடி வருகிறார்.
இம்பேக்ட் பிளேயராக ரோஹித்
அவரால் ஃபீல்டிங் செய்ய முடியவில்லை என்றாலும், கேப்டன்சி அனுபவம் ஏராளமானவை உள்ளது. அதனால் ரோஹித் சர்மாவை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய தேவை மும்பை அணிக்கும் இல்லை. ஆனால் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராகவே விளையாடி வருவதற்கு பின்னுள்ள காரணம் குறித்தும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
கண்ணீர் சிந்திய ஹர்திக்
இதனால் மும்பை அணியின் தோல்விக்கு அந்த அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தை விடவும், அந்த அணிக்குள் இருக்கும் அரசியலே காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தன்னால் முடிந்த வரை போராடிய போதும், தோல்வியை தழுவி வருகிறார். இதனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், அவர் கண்ணீர் சிந்தியதும் இதற்குதானோ என்ற கேள்வி எழுந்துள்ளது.