ரோஹித், பும்ரா அபாரம் -இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா ..!

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும் எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 1983 ம் ஆண்டு உலக்கிண்ணத்துக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுக்களையும் பதம் பார்த்தனர்.

இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் இன்னுமொரு சத இணைப்பாட்டம் புரிந்தனர்.

இறுதியில் இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர் .

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

? இங்கிலாந்து மண்ணில் இந்தியர்களின் சிறந்த ODI பந்துவீச்சு சாதனைகள் ?

6/19 – ஜஸ்பிரித் பும்ரா v ENG, 2022
6/25 – குல்தீப் யாதவ் v ENG, 2018
5/27 – வெங்கடேஷ் பிரசாத் v PAK, 1999
5/31 – ரொபின் சிங் v SL, 1999
5/36 – ரவீந்திர ஜடேஜா vs WI, 2013
5/43 – கபில் தேவ் v AUS, 1983

? ஒருநாள் போட்டிகளில் வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியது ?

✅ மிட்செல் ஸ்டார்க் – 77 போட்டிகள்
✅ சக்லைன் முஷ்டாக் – 78 போட்டிகள்
✅ ரஷித் கான்/முகமது ஷமி – 80 போட்டிகள்

?: Sony sports


YouTube தளத்துக்கு ?