லக்னோவை வீழ்த்தி 2வது Qualifier க்கு முன்னேறியது RCB..!

லக்னோவை வீழ்த்தி 2வது Qualifier முன்னேறியது RCB..!

IPL தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 37 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. டி காக் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மானன் வோரா 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹூடா 45 ரன்னில் வெளியேறினார், ஸ்டோய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார், தனி ஆளாகப் போராடிய ராகுல் 79 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

வரும் 27 ம் திகதி RCBvRR அணிகளுக்கிடையில் 2 வது குவாலிபயர் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

YouTube link ?

 

 

 

 

 

Previous articleLSG vs RCB: ஐபிஎல் 2022 எலிமினேட்டர் வாஷ் அவுட் செய்யப்பட்டால் என்ன நடக்கும்?
Next articleலக்னோ அணிக்கெதிராக திருப்பு முனையான ஹசரங்கவின் விக்கெட் (வீடியோ இணைப்பு )..!