லிவர்பூல் நட்சத்திரம் மொகமட் சாலா உபாதையடைந்தார் ..!
லிவர்பூல் நட்சத்திரம் மொகமட் சாலா நேற்று இடம்பெற்ற FA கிண்ண இறுதிப்போட்டியில் உபாதைக்குள்ளாகியுள்ளார்.
2018: ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் சாலா இடைநடுவே காயமடைந்தார்.
2022: ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், FA கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று சாலா காயமடைந்தமை ரசிகர்களுக்கு பலத்த வேதனையை உண்டுபண்ணியுள்ளது.
வருகின்ற 29ஆம் திகதி பிரான்சின் தலைநகர் பாரிசில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சேம்பியன் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
போட்டியில் சாலா அங்கம்வகிக்கும் லிவர்பூல் அணி ரியல் மேட்ரிட் அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
நேற்று இடம்பெற்ற FA கிண்ண இறுதிப் போட்டியில் சாலா உபாதை ஆகியிருந்தாலும், FA cup கைப்பற்றி லிவர்பூல் சேம்பியன் மகுடம் சூடியது.
விரைவில் குணமடையுங்கள்..?
2020: ❌
2021: ❌
2022: ❌
செல்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக FA கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.