லிஹினி அப்ஷராவின் அற்புதமான சதத்துடன் விமானப்படை A அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நேற்று (07) நடைபெற்ற மகளிருக்கான டிவிஷன் 1 உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் லிஹினி அப்ஷராவின் அற்புதமான சதத்துடன், விமானப்படை A அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி லிஹினி அப்ஷராவின் 127 ஓட்டங்கள் மற்றும் டிலானி மனோதரவின் 46 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 288 ஓட்டங்களை குவித்தது.

 

மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிலாபம் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகள் ஏமாற்றினர். இறுதிாக மல்ஷா மதுஷானி 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தும் அந்த அணியால் 46.3 ஓவர்களில் 145 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில், அமா காஞ்சனா, இனோஷி பெர்னாண்டோ மற்றும் ஓசதி ரணசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Previous articleஅடுக்கடுக்காய் வெற்றிகளைக் குவிக்கும் லக்னோ அணி …!
Next articleதோனிக்கு நிகரான சாதனை புரிந்து அசத்திய ராகுல் திவாட்டியா – குஜராத் ஹாட்ரிக் வெற்றி…!