லெஜண்ட்ஸ் லீக் – இந்திய மற்றும் உலக அணிகளின் விபரம்…!

லீக் ஆஃப் லெஜெண்ட்ஸின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான போட்டிகளை சிறப்பான போட்டியுடன் தொடங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டிகள் இந்தியா மகாராஜாஸ் மற்றும் உலக ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். லெஜெண்ட்ஸ் லீக் 16 செப்டம்பர் 2022 முதல் தொடங்கும், இது 4 அணிகளின் பங்கேற்புடன் நடைபெறும் மற்றும் இந்த ஆண்டு போட்டியில் 15 போட்டிகள் அடங்கும்.

இந்தியாவின் மகாராஜாக்கள்:

சௌரவ் கங்குலி (c), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, எஸ் ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஷர்மா சிங், ஜோகிந்தர் சரமா

World Giants

Eoin Morgan (c), Lendl Simmons, Herschelle Gibbs, Jacques Kallis, Sanath Jayasuriya, Matt Prior, Nathan McCullum, Jonty Rhodes, Muttiah Muralitharan, Dale Steyn, Hamilton Masakadza, Mashrafe Mortaza, Asghar Afghan, Mitchell Johnson, Brett Lee, Kevin O’Brien, Denesh Ramdin