லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மூலமாக கிரிக்கெட் களத்துக்கு திரும்பும் முன்னாள் வீரர்கள் விபரம்..!
கடந்த ஆண்டு நடந்த சாலைப் பாதுகாப்பு உலகத் தொடரின் நீடிப்பாக, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஜனவரி 20, 2022 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இது கடந்த காலங்களில் கிரிக்கெட் களத்தை ஆண்ட ஓய்வு பெற்ற உலகெங்கிலும் உள்ள மூத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவும் இந்த தொடர் பார்க்கப்படுகின்றது.
லெஜெண்ட்ஸ் லீக்கிற்குப் பிறகு, சாலை பாதுகாப்பு (Road safety) உலகத் தொடர் பிப்ரவரியில் நடைபெறும்.
இதேவேளை, ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூத்த மற்றும் சூப்பர் துடுப்பாட்ட வீரர்களின் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் ஆறாவது இலங்கை கிரிக்கெட் வீரராக நுவான் குலசேகர நேற்று (5) போட்டியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரண, டி.எம்.தில்ஷான், சமிந்த வாஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் இதற்கு முன்னர் ஏசியன் லெஜண்ட்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.
அசார் மஹ்மூத், மிஸ்பா உல் ஹக், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப், உமர் குல், ஷோயப் அக்தர், ஷாஹித் அப்ரிடி, யூனிஸ் கான் மற்றும் அஸ்கர் ஆகியோர் ஆசிய லெஜண்ட்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற வீரர்கள்.
அனைத்து போட்டிகளும் 2022 ஜனவரி 20 முதல் 29 வரை ஓமானில் உள்ள அல் அமெரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
அதன்படி, சமீபத்திய ஆசிய லெஜண்ட்ஸ் அணி,
சோயிப் அக்தர், ஷாஹித் அப்ரிடி, சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதாரண, திலகரத்ன டில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, நுவான் குலசேகர, மிஸ்பா-உல்-ஹக், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹபீஸ், ஷோயிப் கான்சுல், மொஹமட் யூசுல் , அஸ்கர் ஆப்கான்.