வியாழன் அன்று (ஆகஸ்ட் 18) லண்டனில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினாலும் புதிய மைல்கல்லை எட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் ஆனார். இங்கிலாந்துக்காக தனது 156வது டெஸ்டில் விளையாடும் பிரோட், மூத்த பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு, கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஒரே மைதானத்தில் வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் ஆனார்.
40 வயதான ஆண்டர்சன் லோர்ட்ஸ் மைதானத்தில் 117 விக்கெட்டுக்கள் உள்ளன. இந்த இரண்டு இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான்களைத் தவிர, மற்ற இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இடத்தில் 100+ விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர், அந்த இருவரும் இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆவர்.
டெஸ்ட் போட்டி வரலாற்றில் 800 எனும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன், காலி (111), கண்டி (117), கொழும்பில் உள்ள SSC (156) ஆகிய மூன்று மெதானங்களில இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஹேரத் காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டிசம்பர் 9, 2007 அன்று கொழும்பில் இலங்கைக்கு எதிராக தனது டெஸ்டில் அறிமுகமான பிரோட், டெஸ்ட் வரலாற்றில் ஆறாவது அதிக விக்கெட் எடுத்தவர் ஆவார். அவர் 553 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்,
மேலும் அவர் தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தற்போதைய தொடரில் மேலும் 11 விக்கெட்டுகளை எடுத்தால், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத்தை கடந்து ஐந்தாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆவார்.
பிரோட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் இதுவரை கண்டிராத சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். பிரோட் அறிமுகமானதில் இருந்து, இருவரும் இணைந்து பெரும்பாலான போட்டிகளில் விளையாடி, இங்கிலாந்தின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.