லோர்ட்ஸ் வெற்றியின் இரகசியம்- ஒருவர் மீது நீங்கள் தாக்க வந்தால் நாங்கள் 11 பேரும் உங்கள் மீது தாக்க வருவோம்..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லோர்ட்ஸ் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொண்டது.
5 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி Draw வில் நிறைவுக்கு வந்த நிலையில், 2-வது போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியின் பின்னர் ஆட்ட நாயகன் விருது பெற்ற KL ராகுல் முக்கியமான கருத்தை வெளியிட்டார்.
நீங்கள் எங்கள் ஒருவர் மீது தாக்க முற்பட்டால் நாங்கள் 11 பேரும் உங்கள் மீது தாக்குதல் தொடுக்க வருவோம் என்பது அவருடைய மறைமுகமான கருத்தாக இருந்தது.
இரு பலமான அணிகள் மோதும் போது Sledging போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். எங்களுக்கும் போட்டியின் போது இதுபோன்று வார்த்தைப் போரில் ஈடுபடுவது பிடிக்கும்.
ஆனால் எங்களின் அணியில் ஒருவரை நீங்கள் தாக்கினாலோ, பேசினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம்.
எங்களது பௌலிங்கின் போதும் நாங்கள் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். அதனாலேயே எங்களால் வெற்றி பெற முடிந்தது என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.