யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
சுதர்சன் சுபர்ணன் சகலதுறை ஆட்டம், குமணன் தரணிசன், ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் ஆகியோரது அற்புத பந்துவீச்சுஆற்றல்கள் மூலம் யாழ். இந்துவின் வெற்றியைஇலகுபடுத்தியிருந்தனர்.
இந்த வெற்றியுடன் இந்துக்களின் பெருஞ்சமரில் 3ஆவதுவெற்றியை யாழ். இந்துக் கல்லூரி அணி ஈட்டியதுடன், இந்துக்களின் சமர் 3 – 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில்சமநிலை அடைந்துள்ளது.
நேற்று (15) ஆரம்பமான இப் போட்டியில் முதலில்துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி முதல்இன்னிங்ஸில் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடி சகலவிக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமேஇரட்டை இலக்க எண்ணிக்கைளைப் பெற்றனர்.
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் முத்துக்குமார் அபிஷேக் 14 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்ரீ நிதுஷான் 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் சுதர்சன் சுபர்ணன் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீஜயந்தன் ஹரிஹரன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், யோகாலன் சாருஜன்3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி முதலாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கிருஷ்ணராஜன் பரேஷித், ஜெகதீசன் பவானன் ஆகியஇருவரும் முதல் விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களைப்பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
பரேஷித் 46 ஓட்டங்களுடனும், பவானன் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த லோகேஸ்வரன் பிரியந்தன் (19), அன்ரன் விதுஷன் (2) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். எனினும், மத்திய வரிசையில் களமிறங்கியதினேஸ்ரமன்பிரேமிகன் 38 ஓட்டங்களுடனும், குமணன்தரணிசன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில்இருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று (16) தமதுஆட்டத்தைத் தொடர்ந்த யாழ். இந்துக் கல்லூரி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அந்தஅணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட்காப்பாளர் தினேஸ்ரமன்பிரேமிகன் 43 ஓட்டங்களை எடுக்க, பின்வரிசையில் வந்த சுதர்சன் சுபர்ணன் 31 ஓட்டங்களையும், வை. சாருஜன் 28 ஓட்டங்களையும்குவித்து வலுச்சேர்த்தனர்.
கொழும்பு இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் முத்துக்குமார்அபிஷேக், திவாகரன் யாதவ் மற்றும் ஸ்ரீ நிதுஷான் ஆகியமூவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
160 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், பலோ ஒன்முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியகொழும்பு இந்துக் கல்லூரி அணி, 32 ஓவர்களில் சகலவிக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்கயை மாத்திரம்எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் ராம்ராஜ்டிலோஜன் மாத்திரம் 28 ஓட்டங்களை அதிகபட்சமாகஎடுக்க, மற்றைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் நடையைக்கட்டினார்கள்.
யாழ். இந்துக் கல்லூரிக்காக மீண்டும் ஒரு தடவைபந்துவீச்சில் அசத்திய சுதர்சன் சுபர்ணன் 5 ஓட்டங்களுக்கு4 விக்கெட்டுகளையும், குமணன் தரணிசன் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீஜெயந்தன்ஹரிஹரன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்கைப்பற்றினர்.
இதன்படி, ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால்வெற்றியீட்டிய யாழ். இந்துக் கல்லூரி அணி, இந்தஆண்டுக்கான 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர்தொடரை தனதாக்கிக் கொண்டது.
விருதுகள்
- ஆட்டநாயகன்: சுதர்சன் சுபர்ணன் (31 ஓட்டங்கள், 7 விக்கெட்டுகள் – யாழ். இந்துக் கல்லூரி)
- சிறந்த துடுப்பாட்ட வீரர்: கிருஷ்ணராஜன் பரேஷித் (46 – ஓட்டங்கள் யாழ். இந்துக் கல்லூரி)
- சிறந்த பந்துவீச்சாளர்: குமணன் தரணிசன் (5 விக்கெட்கள் – யாழ். இந்துக் கல்லூரி)
- சிறந்த களத்தடுப்பாளர்: ரீ. பிரேமிகன் (யாழ். இந்துக்கல்லூரி)
நன்றி Thepappare