ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இரண்டு போட்டிகள் இடம்பெற்று இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.
இதேவேளை, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்துவரும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என உள்ளக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வனிந்துவின் தசை பாதிக்கப்பட்டு, தீவிர நிலை இல்லையென்றாலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்குமாறு வனிந்துவை அறிவுறுத்தினர்.
மருத்துவ ஆலோசனை காரணமாக வனிந்து ஹசரங்க இரண்டு வாரங்களுக்கு நீக்கப்பட்டதோடு, எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
இதன்படி, அண்மையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வனிது ஹசரங்கவுக்குப் பதிலாக இடம் பெற்ற ஜெப்ரி வான்டேஸி, எதிர்வரும் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளார்.
YouTube காணொளிகளுக்கு ?