லக்ஷ்மணும் , டிராவிட்டும் கழுத்துல kerchief மாரி கட்டீட்டு கெத்தா நடந்துவர இந்த புகைப்படம் சம்மந்தப்பட்ட மேட்ச்சுக்கு பின்னாடி பெரிய கதையே இருக்குது.
2001 March, Eden Gardens
ஆஸ்திரேலியா அந்த Test ஐ 445/10ல முடிச்சாங்க. Harbajan 7 விக்கெட் எடுத்திருந்தார். அதுல ஒரு Hat-trick.
அடுத்து இந்தியா fight பண்ணும்னு எதிர்பாத்தா 3வது நாள் 171க்கு all out ஆனாங்க. Follow on ம் ஆனாங்க.
அப்ப ரசிகர்கள் எல்லாருக்கும் Draw கூட கஷ்டம்னுதான் தோணீருக்கும்.
ஆனா அங்க வந்து நின்னான் ஒருத்தன் Laxman னு. அடிச்சான் அடிச்சான் அடிச்சுட்டே இருந்தான் , நின்னுட்டே இருந்தான் ஒருநாள் முழுசும். 281 ரன் அடிச்சான். முதல் innings ல இந்தியா அடிச்சதைவிட அதிகம் அடிச்சான் ஒருத்தனே. கூட Rahul Dravid 180 அடிச்சார்.
2nd Innings ல இந்தியா அடிச்சது 657/7. 5 வது நாள் ஒருமணிநேரம் ஆடீட்டு Ganguly Declare பண்ணீட்டார். ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏன் இப்படி பண்றார். இனி Draw ஆகற மேட்ச்சை எதுக்கு அவங்களுக்கு ஆடக்குடுக்கறார்னு.
ஆனா கங்குலி plan வேறயா இருந்தது. ஆஸியை bat பண்ண கூப்பிட்டார். பந்தை Harbajan கைல குடுத்தார். அவர் 6 விக்கெட் எடுத்தார். ஆஸி 212க்கு All out ஆனாங்க. இந்தியா அதே 171 ரன் வித்யாசத்துல ஜெயிச்சது..🔥🔥🔥
Laxman, Dravid உடைய Temperament, Harbhajan ன் accuracy, எல்லாத்துக்கும் மேல Ganguly என்கிற ஒரு வலிமையான கேப்டனின் Confidence, துணிவு ஒரு Follow on ஆன மேட்ச்சை இந்தியா ஜெயிக்க வைச்சது.. 👌👏👏
இதனாலதான் Test கிரிக்கெட் வரலாற்றுலயே அது ஒரு மிகப்பெரிய வெற்றியா அமைஞ்சது.
✍️ Arun Kumar G