வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்ட தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கிய சன்ரைசர்ஸ் அணி தற்போது மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. அதுவும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து ஆர்சிபி அணியிடம் ஹைதராபாத் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இன்றைய நாள் எங்களுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. பேட்டிங்களும் அதிக விக்கெட்டுகளை கொத்தாக ஒரே நேரத்தில் இழந்து விட்டோம். இனி நாங்கள் எல்லா போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். அதுதான் எங்களுக்கு கை கொடுக்கின்றது. சில போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன் நாங்கள் முதலில் பந்து வீசினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் எதுவும் இன்று கைகூடவில்லை. வெற்றி பெற்றால் அணி வீரர்களுடன் நான் பேசுவேன். தோல்வியை தழுவினால் விட்டோரி தான் பேசுவார். டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உங்களால் அனைத்து போட்டிகளையும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. இந்த தோல்வியால் நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அதிரடியாக ஆடி ரண்களை சேர்த்தால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்.
அதிரடியாக பேட்டிங் விளையாடுவது எங்களுடைய பலமாக இருக்கிறது. அதே சமயம் இது எல்லா போட்டியிலும் கை கொடுக்காது என்பதை புரிந்து வைத்திருக்க வேண்டும். இதுபோல் ஒரு சில ஆட்டங்களில் தோற்கவும் கூடும்.
நாங்கள் இன்றைய போட்டியில் விக்கெட்டுகளை இழந்தாலும் நாங்கள் ஒரு நல்ல இலக்கை எட்டினோம் என்று நினைக்கிறேன். எங்கள் அணி வீரர்கள் தொடர்ந்து இதே போல் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.