விக்கெட் வீழ்த்துவதற்காக பூம்ரா செய்த கோமாளிக் கூத்து- போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

WTC இறுதிப்போட்டியில் நான்காவது நாள் மழை காரணமாக கைவிடப்பட்ட பின்னர்,இன்று சிறிது தாமதத்திற்குப் பிறகு 5 ஆம் நாள் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

நியூசிலாந்தின் அனுபவமிக்க இரட்டையர்கள் – ரோஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங் செய்ய விரைந்தனர், இந்தியா இஷாந்த் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் இன்றைய நாள் போட்டியை ஆரம்பித்தது.

போட்டியில் ஸ்விங்கிற்காக பும்ரா தொடர்ந்து போராடினாலும், அவர் தனது முதல் நாள் பிழையில் இருந்து பாடம்கற்றுக்கொண்டு மிகவும் ஒழுக்கமாக பந்து வீசினார். இருப்பினும், அவர் ஒரு பெரிய தவறு செய்தார், அவர் அதை சரிசெய்வதற்கிடையில் , ரசிகர்கள் ஏற்கனவே அதை கவனித்தனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டும் WTC பைனலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சி அணிய மறந்து, அதற்கு பதிலாக பழைய ஜெர்சி அணிந்து முதல் ஓவரை வீசினார். வலது மார்பில் WTC பைனல் 2021 லோகோவுக்கு பதிலாக ஒரு MPL லோகோ இருந்தது, ​​அதேபோன்று முன்பக்கத்தில் இந்தியாவுக்கு பதிலாக BYJU என்று அச்சிடப்பட்ட ஜெர்சியுடன் விளையாடினார்.

முதல் ஓவரை வீசிய பின் மீண்டும் டிரஸ்ஸிங் அறைக்கு விரைந்து சரியான ஜெர்சி அணிந்து திரும்பி வந்து பும்ரா 2 வைத்து ஓவரை வீசியமையும் இன்றைய சுவாரஸ்ய விடயமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக விளையாடிய அவுஸ்திரேலிய தொடரில் பூம்ரா விக்கெட் வேட்டை நிகழ்த்தினார், ஆனால் நேற்று அவருக்கு நல்ல வாய்ப்பு அமையவில்லை.

ஆகவே அதிஸ்டத்தை மையப்படுத்தி பூம்ரா பழைய சீருடையில் இன்று போட்டிக்கு வந்ததாகவும் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.