விமான விபத்திலிருந்து தப்பிப்பிழைத்து தாயகம் திரும்பிய இலங்கை வீரர்கள் -மிக்கி ஆர்தர் அதிர்ச்சித் தகவல்…!

விமான விபத்திலிருந்து தப்பிப்பிழைத்து தாயகம் திரும்பிய இலங்கை வீரர்கள் -மிக்கி ஆர்தர் அதிர்ச்சித் தகவல்…!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இலங்கை அணியினர் தொடரை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பும் வழியில் பாரிய விபத்திலிருந்து மீண்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை வீரர்கள் பயணம் மேற்கொண்ட விமானத்தில் எரிபொருள் இழப்பு ஏற்பட்டதால், நாங்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு திரும்பும் விமானத்தில் எரிபொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அணி இந்தியாவில் தரையிறங்க வேண்டியிருந்ததாகவும் இலங்கை தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார்.

இலங்கையின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தகவல்படி , “நாங்கள் பயணித்த விமானம் எரிபொருளை இழந்ததால் நாங்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நான் இந்தியாவில் தரையிறங்கியபோது, ​​எனது தொலைபேசியை இயக்கினேன், வெய்ன் பென்ட்லி [England’s operations manager] [இங்கிலாந்தின் செயல்பாட்டு மேலாளர்] அவர்களிடமிருந்து சில செய்திகளைப் பெற்றேன்.

எங்களுக்கு அவரது தகவலை கேட்டவுடன் நாடி, நரம்பெல்லாம் கிடுகிடுத்துப்போனது என தெரிவித்தார்.

விமானிகள் எரிபொருள் குறைவை சரியாக கவனித்திருக்காவிட்டால் பாரிய விபத்தை கூட இலங்கை அணியினர் பயணித்த விமானம் சந்தித்திருக்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பின்னர் இந்தியாவிலிருந்தே மீண்டும் இலங்கை பயணத்தை ஆரம்பித்து தப்பிப்பிழைத்து தாயகம் திரும்பியதாக மிக்கி ஆர்தர் தெரிவித்த கருத்து இப்போது பேசுபொருளாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இலங்கை அணி இங்கிலாந்தில் எதுவித வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.