இந்தியா Vs பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவது இல்லை.
ஐசிசி தொடர்களை தவிர்த்து, இரு அணிகளும் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட கிரிக்கெட் போட்டியில் மோதியது இல்லை.
ஐசிசி முயற்சி
அவ்வளவு ஏன் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது அல்ல. சரி துபாய் போன்ற நாட்டில் இரு அணிகளையும் இரத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வைத்துவிடலாம் என்று ஐசிசி முயற்சித்தால் அதற்கும் வழியில்லை.
பாகிஸ்தான் திட்டம்
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மட்டும் பங்கேற்கும் ஒரு தொடரை நடத்த ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக திட்டப் பணிகளையும் மேற்கொள்ள தயார் என்று அவர் அறிவித்தார். ஆனால், அதற்கு பிசிசிஐ வாய் திறக்கவில்லை.
முத்தரப்பு தொடர்
தற்போது இந்த பிளானை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தி வருகிறது. ஆஸ்திரேலியா கடந்த பல ஆண்டுகளாக முத்தரப்பு தொடரை ஆண்டுதோறும் நடத்தி வந்தது. ஆனால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் அந்த தொடரை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வைத்து கிரிக்கெட் போட்டியை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.