விளையாட்டுத் துறையில் உயர் பதவி ரணதுங்கவுக்கு …!

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிற்கு விசேட பொறுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விளையாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க இதனை உறுதிப்படுத்தியதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் மேலும், இது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் தாம் தீர்மானம் மேற்கொள்வதாக அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு கவுன்சில் நாளை நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஹேல ஜெயவர்த்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக கடமையாற்றியதுடன் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இராஜினாமாவுடன் அவரும் குழுவும் இராஜினாமா செய்தனர்.