வீட்டுப்பிரசனையை நான் பார்த்துக்கொள்கிறேன்- நீங்கள் விளையாடுங்கள்-பாகிஸ்தானிய வீரப்பெண்.

கடந்த வாரம் இஸ்லாமாபாத் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி, தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி போட்டியை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார்.

இருப்பினும், அவரது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு, ஹசன் அலி இப்போது PSL போட்டியை தொடர முடிவு செய்துள்ளார், 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, தனது மனைவி சாமியா அர்சூவுக்கு குடும்ப பிரச்சினையை கையாண்டதற்காக நன்றி தெரிவித்ததுள்ளார்.

“நான் ஒரு தனிப்பட்ட குடும்ப பிரச்சினையை சந்தித்தேன், என் அன்பு மனைவிக்கு நன்றி. அவர் அதை கவனித்துக்கொள்வார் என்று எனக்கு உறுதியளித்துள்ளார், மேலும் எனது கிரிக்கெட்டிலும் எனது வாழ்க்கையிலும் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றும் ஹசன் அலி தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

“என் மனைவி எப்போதுமே கடினமான காலங்களில் என்னுடன் தோள்கொடுக்கின்றார் , அவருடன் கலந்தாலோசித்தபின், PSL 6 இன் எஞ்சிய காலத்திற்கு இஸ்லாமாபாத் யுனைடெட் போட்டிகளில் தொடர முடிவு செய்துள்ளேன். இந்த கடினமான காலகட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் ஆதரவிற்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ரசிகர்களின் பிரார்த்தனைக்கும் ஆதரவிற்கும் குறிப்பாக நன்றி தெரிவிப்பேன், இந்த கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு பலம் அளித்துள்ளனர் என்றும் ஹசன் அலி கூறினார்.

இப்போது மீதமுள்ள போட்டிகளில் ஹசன் அலி விளையாடுவார் என்று இஸ்லாமாபாத் யுனைடெட் உரிமையாளர் அலி நக்வி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

மீதமுள்ள போட்டிகளின் மூலம் ஹசன் எங்களுக்கு தொடர்ந்தும் கிடைப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால் அதைவிட முக்கியமாக, அங்குள்ள எந்த சிக்கல்களும் தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறினார்.