வீதிப் பாதுகாப்பு தொடர் – இலங்கை லெஜெண்ட்ஸ் அணி விபரம் அறிவிப்பு…!

வீதி பாதுகாப்பு உலக தொடருக்கான இலங்கை லெஜண்ட்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பு உலகத் தொடர், செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 1 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கான்பூர், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் டேராடூனில் நடைபெறவுள்ளதுடன், ராய்ப்பூரில் நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப்போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக அதிரடி சகலதுறை வீரர் டில்சான் செயல்படவுள்ளார்.

டில்சான் தலைமையிலான அணியில் சனத் ஜெயசூரிய, நுவான் குலசேகர, திசிர பெரேரா, சமிந்த வாஸ் , தம்மிக பெரேரா , டில்ருவன் பெரேரா, அசேல குணரத்ன, சதுரங்க டி சில்வா, ஜீவன் மென்டிஸ், இசுரு உதான உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

 

எமது YouTube தளத்துக்கு செல்ல ?

 

 

 

 

Previous articleபாகிஸ்தான் சுற்றுலா மேற்கொள்ளும் இங்கிலாந்து – 5 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்றனர்..!
Next articleஇந்திய அணியின் முக்கிய வீரருக்கு உபாதை -மாற்று வீரர் அறிவிப்பு..!