இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜூன் 3 ஆம் திகதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அவர்கள் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக தற்போது பங்களாதேஷில் உள்ள தேசிய அணி வீரர்கள் நாடு திரும்பியதும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார்கள் என்று நம்புகின்றோம், புதிய செயல்திறன் சார்ந்த ஒப்பந்தங்களின் விதிமுறைகளைப் பின்பற்ற கூடுதல் கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்குச் சென்ற வீரர்கள் குறித்த சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திட்டுள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி வரை ஒப்பந்தங்களைப் படித்து கையெழுத்திட நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்று இன்றைய தொலைதூர தொழிநுட்ப கலந்துரையாடல் ஒன்றில் அரவிந்த டி சில்வா கூறினார்.
இலங்கையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா மேலும் கூறுகையில், எந்தவொரு வீரரும் வழங்கிய ஒப்பந்தத்தை மறுத்துவிட்டால், சுற்றுப்பயண ஒப்பந்தத்தின் மட்டும் கையெழுத்திட்டுவிட்டு இலங்கை அணிக்காக போட்டிகளில் பங்கேற்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒரு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் மறுத்து எங்களுக்கு எதனையும் அறிவிக்கவில்லை,
வீரர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர்கள் குறித்த ஒரு சுற்றுப்பயணத்தை மட்டும் இலக்காக கொண்டு கைச்சாத்திட்டு விளையாடலாம் எனவும் தெரியவருகின்றது.
புதிய வீரர் ஒப்பந்தத் திட்டத்தின் கீழ், 24 கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய வீரர் ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன, மேலும் ஆறு வீரர்கள் வரை உள்நாட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு குறுகின்றது.
எது எவ்வாறாயினும் புதிய ஒப்பந்த நடைமுறையில் வீரர்கள் அவ்வளவு திருப்திப்படவில்லை என்றே நம்மால் அறிய முடிந்தது.