வெல்லாலகே, சமரவிக்ரம ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி வீரர்களாக முடிசூட்டப்பட்டனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று இலங்கை வீரர்கள் துனித் வெல்லாலகே மற்றும் ஹர்ஷித சமரவிக்ரம ஆகியோரை ஆகஸ்ட் 2024க்கான ஐ.சி.சி மாத வீரர்களாக அறிவித்தது.
இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரில் வெல்லலகே சிறப்பாக செயல்பட்டதும், சமரவிக்ரம அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பித்ததும் இலங்கைக்கான அரிய சாதனைக்கு காரணமானது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஒரே மாதத்தின் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் , ஒரே மாதத்தில் ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்கள் விருதுகளை வென்ற இன்னுமொரு நிகழ்வு இதுவாகும்.
#Wellalage, #Samarawickrama 🏏❤🇱🇰
#ICC #ICCPlayeroftheMonth #SriLankaCricket