வோர்னர் புதிய உலக சாதனை – உலக சாம்பியன்களுக்கு இலகு வெற்றி..!

டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கைக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தோல்வியால் இலங்கை இன்னிங்ஸ் சரிந்தது, 12 ஓவர்கள் முடிவில் 100-1 என சிறப்பாக இருந்தாலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சு வரிசைய இலங்கையை கட்டுப்படுத்தியது. 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக சரித் அசலங்கா (38), பாத்தும் நிஸ்ஸங்க (36), தனுஷ்க குணதிலக (26), வனிந்து ஹசரங்க (17) ஆகியோர் அதிகபட்சமாக ஆட்டமிழந்தனர்.

ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் டேவிட் வார்னர் 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார், கேப்டன் ஆரோன் பின்ச் 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதை ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பாக பந்துவீசியதற்காக பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சுற்றுலா ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

YouTube காணொளிகளுக்கு ?

வோர்னர் படைத்த உலக சாதனை #SLvAUS ?

Instragram ல் அதிக followers கொண்ட விளையாட்டு வீரர்கள் ?