ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக அதிரடி விசாரணைகள் ஆரம்பம்- ரணதுங்க தலைமையிலான விளையாட்டு கவுன்சில் நடவடிக்கை…!

இலங்கையின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டு கவுன்சில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் (SLC)க்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளது.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்பட்டதற்கான காரணத்தை கவுன்சில் ஆராய உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அறிக்கை ஒப்படைக்கப்படும் என்று உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆசியக் கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுடனான தொடரை நடத்தியுள்ள நிலையில், ஆசிய கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான வழியை SLC கண்டுபிடித்திருக்க வேண்டும் என்றார்.

போட்டியை நடத்துவதில் SLC ஏன் தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பிய விளையாட்டு அமைச்சர், இலங்கையின் போராடும் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கு கிரிக்கெட் தொடரின் மூலம் மிகவும் தேவையான பணத்தை கொண்டு வந்திருக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அர்ஜூனா தலைமையிலான தேசிய விளையாட்டு கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள்
அர்ஜுன ரணதுங்க – தலைவர்
லெப்டினன்ட் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே
ஏர் மார்ஷல் எஸ்.கே. பத்திரன
வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன
அமல் எதிரிசூரிய
மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹொட்டி
டாக்டர் மையா குணசேகர
ஸ்ரீஅணி குலவம்சம்
வழக்கறிஞர் அஜித் பத்திரன
சுனில் ஜயவீர
கிரிஷாந்த மெண்டிஸ்
லசித குணரத்ன
நளிந்த இளங்ககோன்
சுதத் சந்திரசேகர
சுஜானி போகொல்லாகம