அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பால் காலமானார்.
52 வயதே ஆகும் அவரின் இந்த திடீர் மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பரபரப்பு கிளம்பியது.
3 நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்கு இன்பச்சுற்றுலாவாக சென்றிருந்தார்.
அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது தன்னுடைய அறையில் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கிடந்துள்ளார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட முதலுதவி தோல்வியில் முடிவடைந்த பின்னர் தான் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் வோர்ன் தங்கியிருந்த விடுதியின் சிசிடிவி காட்சிகளில் இருந்து முக்கிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக வோர்ன் வெளியே இருந்து தனது அறைக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. மார்ச் 4ம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு பதிவானது.
லோபியில் தனது கைகளில் புது துணிகளுடன், ஜாலியாக நடந்து செல்கிறார். அவர் உடல்நிலை சரியில்லாத சூழல் ஒன்றுக்கூட அதில் தென்படவில்லை.
கடைசி பயணம்
அன்றைய தினம் காலையில் தாய்லாந்தில் உள்ள தனது ஃபேரரெட் துணி டெய்லர், புதிய துணிகளை வாங்கச்சென்றுவிட்டு வந்துள்ளார். அங்கு நீண்ட நேரம் காத்திருந்து தனது புதிய சூட்களை பெற்றுக்கொண்ட பின்னர், அறைக்கு திரும்பியுள்ளார். அதன்பின்னர் தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஏற்கனவே வார்னேவின் கடைசி புகைப்படம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அடாப்சி ரிப்போர்ட்
ஷேன் வோர்னின் அடாப்சி ரிப்போர்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இயற்கையான முறையில் தான் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரமாக நீராகாரங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும் டயட்டில் வோர்ட் இருந்துள்ளார் எனவும், அது முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் குடும்பத்தாரே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.