ஸ்பார்க் இல்லை என்று புறக்கணித்த தோனி – பும்ராவுக்கு அடித்த சிக்சர், மிரட்டும் கெய்க்வாட் (வீடியோ இணைப்பு)

ஸ்பார்க் இல்லை என்று புறக்கணித்த தோனி – பும்ராவுக்கு அடித்த சிக்சர், மிரட்டும் கெய்க்வாட் (வீடியோ இணைப்பு)

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல்லில் 30வது ஆட்டம் நேற்றைய நாளில் நிறைவிற்கு வந்தது .

நேற்றைய போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது .

சென்னை அணியை வெற்றிக்கு காரணமாக இளம் வீரர் கெய்க்வாட் திகழ்ந்தார் ,ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கெய்க்வாட் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ராவுடைய இறுதி ஓவரில் இறுதிப் பந்தில் ஒரு அபாரமான சிக்சரை அடித்தார்.

அந்த சிக்ஸர் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது, வர்ணனையாளர்களும் அந்த சிக்சரை வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த கெய்க்வாட், ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று வர்ணித்து தோனி கடந்த ஐபிஎல் சீசனில் புறக்கணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னரான 14 ஆட்டங்களில் இந்த கெய்க்வாட் 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்று Spark இல்லை என்று புறக்கணிக்கப்பட்ட கெய்க்வாட் இன்று சென்னையில் நம்பகமான மேட்ச் வின்னர் ஆகியிருக்கிறார்.

வீடியோவை பாருங்கள் ????