ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் அடுக்கடுக்கான மாற்றங்கள் நிகழ்ந்துவரும் நிலையில் ஊழலற்ற செயலாற்றுகை கொண்ட பலர் தேர்தலில் குதித்து வெற்றிபெற சந்தர்ப்பம் அமையவுள்ளது.

தலைவர், இரு உப தலைவர்கள், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி திகதி 24 ம் திகதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா செயல்பட்டுவருகின்றார்.

Previous articleதிரைப்படத்தில் நடராஜன்…?
Next articleகிரிஸ் கெயில் வாணவேடிக்கை …!