ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 80 ஆம்
வருட குழுமத்தினரால் நடத்தப்பட்ட 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup – 2024 Challenge Trophy இன் ஆரம்ப விழா 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் வாத்திய அணியின் கண்கவர் அணிவகுப்புடன் ஆரம்பமான வர்ணமயமான நிகழ்வில் இருபது பாடசாலைகள் பங்குபற்றியதோடு, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நிகழ்வானது பிரதம அதிதி கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
Oxford Group குழுமத்தின் தலைவர் இம்தியாஸ் பாரூக், குழுமத்தின் பனிப்பாளரும் Marin Grill & M Burger உணவகங்களின் நிறுவுனருமான ஹிபாஸ் பாரூக் ஆகியோரினால் கிண்ணம் உத்தியோகபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டது.
உத்தியோகபூர்வ பந்து “NIVIA” கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,பிரபல வர்த்தகர்களான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹனீபா மற்றும் அல் ஹாஜ் காதர் முகையதீன் நூஹ் ஆகியோரினால் காட்சிப்படுத்தப்பட்டது.