ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஜனாதிபதி கிண்ணம் 2024 சவால் கிண்ணத்தை வெற்றி கொண்டது..!

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஜனாதிபதி கிண்ணம் 2024 சவால் கிண்ணத்தை வெற்றி கொண்டது..!

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியான ஒக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் 2024 சவால் கிண்ணத்தின் மாபெரும் இறுதிப்போட்டியானது 2024 மார்ச் 07ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் மின் ஒளியின் கீழ் பெரும் திரளான மக்கள் கூட்டத்தின் கீழ் இடம் பெற்றது.

இறுதிப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி புனித தோமஸ் கல்லூரியை சந்தித்தது இப்போட்டியில் A.F.M.Arham இன் ஹாட்ரிக் கோல்களின் உதவியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் எளிதான வெற்றியைப் பெற்றது.
போட்டியின் 3வது, 27வது மற்றும் 90+ நிமிடங்களில் ஏ.எப்.எம்.அர்ஹம் (JNo 9) கோல் அடித்தார்.

தொடர்ந்து வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இறுதிப் போட்டியின் சிறந்த வீரர்: ஏ.எப்.எம்.அர்ஹம் (JNo 9) ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி

போட்டித் தொடரின் அதிக கோல் அடித்தவர் (தங்கக் காலனி): (2 வெற்றியாளர்கள், ஒவ்வொருவரும் தலா 7 கோல்கள்)
– ஏ.எப்.எம்.அர்ஹம் (JNo 9) ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி,கொழுப்பு.
– எம்.எம்.முக்தார் (JNo 11), புனித தோமஸ் கல்லூரி ,கல்கிசை.

போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளர் (தங்கக் கையுறை): எம்.ஏ.ஏ.ஸக்கி (JNo 1) ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி,கொழும்பு.

போட்டித் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP): ஆர்.ஏ. ரகுமான் (JNo 14), ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி,கொழும்பு.

போட்டித் தொடரின் ஸ்டைலிஷ் வீரர்: மாஸ்டர் உமர் ஷகில் (JNo 9), கேட்வே கல்லூரி,கொழும்பு.

முன்னதாக மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கொழும்பு கேட்வே கல்லூரி, நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்றது.

இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இலங்கை ஜனாதிபதியின் தலைமை அதிகாரி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாகல ரத்நாயக்க, 1996 ODI உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அர்ஜுன ரணதுங்க,கௌரவ முஜிபுர் ரஹ்மான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.M.R.M.ரிஸ்கி ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர் திரு.அசங்க எஸ்.பெரேரா புனித தோமஸ் கல்லூரியின் உப வார்டன், ஆக்ஸ்போர்டு குழுமத்தின் திரு.இம்தியாஸ் ஃபாரூக், திரு.ஹிஃபாஸ் ஃபாரூக் மற்றும் திரு.ஷமீல் ஃபாரூக் மற்றும் திரு.ஜெய்னுல் ஆப்தீன், திரு.எச்.எம்.எம்.ஹனிஃபா, திரு.காதர் மொஹிதீன் நூஹு மற்றும் பிற ஸ்பான்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.