ஹர்பஜன் சிங் அறிவித்துள்ள தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் -தோனிக்கு இடமுண்டா ?

ஹர்பஜன் சிங் அறிவித்துள்ள தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் -தோனிக்கு இடமுண்டா ?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது All Time இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளையாடும் லெவன் அணியின் கேப்டனாக பழம்பெரும் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியை அறிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபினிஷராகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஐகான் தோனி 40 வயதிலும் துடுப்பாட்ட வேகம் குறையவில்லை எனலாம்.

பல ஆண்டுகளாக, ஐபிஎல்லின் ஆல்-டைம் பிளேயிங் லெவன்களை வெளியிடும் போது தோனியை பலரும் குறிப்பிட்டுள்ளனர். தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் MI, KKR மற்றும் CSK க்காக விளையாடிய ஹர்பஜன், தோனியை தனது ஆல்-டைம் IPL விளையாடும் XI இன் கேப்டனாகவும் தேர்ந்தெடுத்தார்.

ஹர்பஜனின் ஐபிஎல் பிளேயிங் லெவன் அணியில் மொத்தம் ஐந்து இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரை ஹர்பஜன் தனது நட்சத்திரங்கள் நிறைந்த ஐபிஎல் ப்ளேயிங் லெவன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்தார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியை 3-வது இடத்தில் இறக்கி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுக்கு 4-வது இடம் வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், முன்னாள் இந்திய கேப்டன் தோனி, மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கீரன் பொல்லார்ட் ஆகியோர் அவரது ஆல்-ஸ்டார் விளையாடும் XI இன் மிடில்-ஆர்டரில் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்-ரவுண்டர் சுனில் நரைனைத் தவிர, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், நட்சத்திர பந்துவீச்சாளர்களான லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரையும் தனது ஆல்-டைம் பிளேயிங் லெவன் அணியில் சேர்த்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷேன் வாட்சன், ஏபி டி வில்லியர்ஸ், எம்எஸ் தோனி (WK & C), ரவீந்திர ஜடேஜா, கீரன் பொல்லார்ட், சுனில் நரைன், லசித் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ரா.