ஹாட் ரிக் வெற்றி – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர் இலங்கை வசம்..!

பரபரப்பான போட்டியின் முடிவில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவிடம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைடன் தொடரை 3-1 என இலங்கை கைப்பற்றியது இலங்கை..!

இலங்கை மற்றும் சுற்றுலா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆர்.ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒரு போட்டி எஞ்சியிருந்த நிலையில் 3-1 என தொடரை கைப்பற்றியது.

இது ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும்.

இன்று Toss வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் இலங்கை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். அதன்படி 49 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் கௌரவமான ஸ்கோரை உருவாக்க முடிந்தது. நிரோஷன் டிக்வெல்ல ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க பாத்தும் நிஸ்ஸங்கவும் 13 ரன்கள் எடுத்தார்.இலங்கை முதல் இன்னிங்சில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

தனஞ்சய டீ சில்வா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், தனஞ்சய சில்வா 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியை கௌரவமான ஸ்கோர் போர்டுக்கு இட்டுச் சென்ற சரித் அசலங்க, 106 பந்துகளில் ஒரு அபாரமான சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கலாக 110 ரன்களுடன் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பெற்றார்.

வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களைப் பெற்றார். மேத்யூ குனிமன், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 259 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதன்படி இலங்கை அணி 4 ரன்களால் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர் 99 ரன்களும், பாட் கம்மின்ஸ் 35 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் சமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வான்டசே மற்றும் தனஞ்சய டீ சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, ஒரு போட்டி எஞ்சியிருந்த நிலையில் 3-1 என இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சரித் அசலங்காவுக்கு கிடைத்தது.

1992 ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை ஒருநாள் தொடரில் தோற்கடித்து இருக்கிறது.

சங்கக்கார, மஹேல ஜெயவர்தன உள்ளிட்டோர் விளையாடிய காலகட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை, இலங்கை அணி ஒருநாள் தொடரில் வீழ்த்த முடியாதிருந்தாலும் இலங்கை இப்போது வீழ்த்தியுள்ளமை சிறப்பம்சம் எனலாம்.

இரு நாடுகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இம்மாதம் 24ஆம் தேதி பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

YouTube தளத்துக்கு செல்ல ?