ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி…!

ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின..

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின..போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சன்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் ,களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி .பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர் .ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார்.தொடர்ந்து கான்வே 39 பந்துகளில் அரைசதம் அடித்தார் .

அரைசதம் கடந்த பிறகு இருவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் . மார்கோ ஜான்சென் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்ஸர் .1 பவுண்டரி பறக்கவிட்டார் கான்வே .

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட நிலையில் 99 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் .

அதன்பின்னர் வந்த கேப்டன் டோனி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கான்வே அதிரடி காட்ட இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.டேவான் கான்வே 85 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .

இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி 203 ரன்கள் இலக்குடன் விளையாடியது .தொடக்க வீரர்களாக சிறப்பாக ஆடி தொடக்க விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர் . அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலே விக்கெட்டை இழந்தார் .

அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார் .விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் கேன் வில்லியம்சன் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தார் .அவர் 47 ரன்களில் ஆட்டமிழந்தார் .

நிக்கோலஸ் பூரன் கடைசி வரை போராடினார் .64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .இருந்தாலும் ஹைதராபாத் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை .

இறுதியில் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது .இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

#Abdh.