10 ஆண்டுகளில் பத்தாவது ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி – இந்தியா இங்கிலாந்தில் மீண்டும் தடுமாறுமா ?
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் பயிற்சியில் ஈடுபட்டபோது இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் உபாதையடைந்து முதலாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்ட கில் உபாதைக்குள்ளாகி தொடரை தவறவிட்ட நிலையில், ரோகித் சர்மாவுடன் மயங்க் அகர்வால் ஆரம்ப வீரராக விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போதும் அகர்வால் உபாதைக்கு உள்ளாகி உள்ளதால், ரோகித் சர்மா, ராகுல் ஜோடி ஆரம்ப வீர்ர்களாக விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது.
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய டெஸ்ட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடியாக ராகுல், ரோகித் ஜோடி 10 இணை என்பதும் சுட்டிக்காட்டதக்கது.
அதைவிடவும் 2015ஆம் ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளுக்கான நிரந்தர தலைவராக கோலி நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தியா 12 வீரர்களை ஆரம்பத்துடுப்பாட்ட நிலைக்கு பரிசீலித்து உள்ளமையும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
இங்கிலாந்து மட்டுமே மொத்தம் 17 வீர்ர்களை ஆரம்பத்துடுப்பாட்ட வீர்ர்களாக பயன்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு அடுத்து இந்தியாவே அதிக வீீரர்களை பயன்படுத்தியுள்ளது.
கடந்தமுறை இங்கிலாந்து தொடரில் ஆரம்பத்துடுப்பாட்டம் என்பது இந்தியாவிற்கு டெஸ்ட் வெற்றிகளை பெறுவதற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியா சரியான ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடியை இனம் காணுமா எனும் கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
2018 ஆம் ஆண்டு இறுதியாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா எங்கு வெற்றியை தவறிவிட்டது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் ??
*பர்மிங்காம் டெஸ்ட் – 50 மற்றும் 19 ரன்கள் (31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி),
*லோர்ட்ஸ் டெஸ்ட்- 0 மற்றும் 0 (இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி),
*நாட்டிங்காம் டெஸ்ட்- 60 மற்றும் 60 ரன்கள் (203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி),
* சவுத்தாம்ப்டனில் -37 மற்றும் 4 ரன்கள் (60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி)
* ஓவல் டெஸ்ட்- 6 மற்றும் 1 ரன்கள் (118 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி).
ஆரம்ப இணைப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்த நாட்டிங்காம் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுப் பதிவாக இருக்கிறது.
இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வலுவிழந்த 4 டெஸ்ட் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியை தழுவி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
இறுதியாக 2018 இடம்பெற்ற தொடரை இந்தியா 4-1 எனும் அடிப்படையில் இருப்பதற்கு இந்தியாவின் மோசமான ஆரம்பத்துடுப்பாட்டம் காரணமாக அமைந்தது இங்கே நினைவுபடுத்ததக்கது.