10 வீரர்களோடு விளையாடிய செல்சி- லிவர்பூல் உடனான பரபரப்பான ஆட்டம் சமநிலை ..!
கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிரிமியர் கால்பந்தாட்ட தொடரின் மற்றுமொரு முக்கியமான போட்டி நள்ளிரவு இடம்பெற்றது்
பிரிமியர் லீக் போட்டி தொடரில் நடப்பு சம்பியன் லீக் வெற்றியாளர்களான செல்சி அணி பலம் பொருந்திய முன்னாள் பிரிமியர் லீக் சாம்பியனான லிவர்பூல் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் செல்சி அணியின் நட்சத்திர வீரர் ரெஸ்ஸி ஜேம்ஸ்க்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது , இதனால் செல்சி அணி இறுதிவரைக்கும் பத்து பேரோடு விளையாடுகின்ற துர்ப்பாக்கியமான நிலைக்கு தள்ளப்பட்டது.
45 நிமிடத்தில் மொஹம்மட் சாலா ஒரு கோலை பெற்றுக்கொள்ள அதற்குப் பின்னர் ஒரு செல்சி அணியும் ஒரு கோலை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டி 1-1 எனும் அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது, ஏற்கனவே செல்சி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இரண்டிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்போது மூன்றாவது போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளது.