10 வெற்றிகள்- 8 ஆட்டநாயகன்கள், அசத்தும் குஜராத் டைட்டன்ஸ் வெற்றியின் ரகசியம் என்ன?

10 வெற்றிகள்- 8 ஆட்டநாயகன்கள், அசத்தும் குஜராத் டைட்டன்ஸ் வெற்றியின் ரகசியம் என்ன?

15வது ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அணியாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி காணப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி பங்கேற்றாலும், play off சென்ற முதல் அணியாக வாய்ப்புக்களை உறுதிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த அணியின் வெற்றிக்கு மிகப் பிரதானமான காரணம் ஓர் அணியாக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் திறமைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தைகின்றமை காரணமாக கருதப்படுகிறது.

அவர்கள் இதுவரைக்கும் விளையாடிய போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்று இருக்கிறார்கள், இந்த வெற்றிகளில் 8 வெவ்வேறு வீரர்கள் ஆட்ட நாயகன் விருதுகளை பெற்று வருகிறார்கள் என்பது சிறப்பம்சம்.

அதாவது குறித்து ஒரு வீரரின் முதுகின் மேல் சவாரி செய்து வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளாமல் ஒவ்வொருவராக தங்கள் திறமைகளை மிகச்சரியாக வெளிப்படுத்துவதன் மூலமே இந்த குஜராத் play off வாய்ப்பு பெற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டலாம்.

தலைமை பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா அணித் தலைவர் ஹர்திக் பாண்டியா அவர்களுடைய ஆலோசகர்கள் எல்லோரும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களே.

You Tube Link ?