100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்..!

100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்..!

சுற்றுலா இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டி மேற்கிந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷாய் ஹோப்பிற்கு சிறப்பான போட்டியாக அமைந்தது, இது அவரது வாழ்க்கையில் 100வது ஒருநாள் போட்டியாகும்.

இந்த சிறப்பான ஆட்டத்தில், ஷாய் ஹோப் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து, 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த உலகின் பத்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அதன்படி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 100வது போட்டியில் சதம் அடித்த நான்காவது மேற்கிந்திய வீரர் என்ற பெருமையை ஷாய் ஹோப் பெற்றார். ஷாய் ஹோப் நேற்று இந்தியாவுக்கு எதிராக 135 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கோர்டன் கிரீனிட்ஜ், கிறிஸ் கெய்ல் மற்றும் ராம்நரேஷ் சர்வான் ஆகியோர் தங்களது 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்தனர்.

கடைசியாக 2018ல் 100வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 109 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரும் சதம் அடித்தார்.

100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களில் இலங்கை வீரர் ஒருவர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார தனது 100வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 101 ரன்கள் குவித்துள்ளார். சங்கக்காராவைத் தவிர பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப்பும் இந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

நேன்றைய 2 வது போட்டியில் அக்சர் படேலின் பிரமிப்பூட்டும் இன்னிங்ஸ் மூலம் வெற்றிபெற்ற இந்தியா தொடரை வென்றது.

100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் ?
கோர்டன் கிரீனிட்ஜ் – 102*
கிறிஸ் கெய்ர்ன்ஸ் – 115
முகமது யூசுப் – 129
குமார் சங்கக்கார – 101
கிறிஸ் கெய்ல் – 132*
மார்கஸ் ட்ரெஸ்கோதிக் – 100*
ராம்நரேஷ் சர்வான் – 115*
டேவிட் வார்னர் – 124
ஷிகர் தவான் – 109
ஷாய் ஹோப் – 115

 

100 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதிக ரன்கள் அடித்தோர் விபரம் ?

4808 – ஹாசிம் ஆம்லா
4309 – ஷிகர் தவான்
4217 – டேவிட் வார்னர்
4193 – ஷாய் ஹோப்*
4177 – ஜி கிரீனிட்ஜ்
4166 – குயின்டன் டி காக்
4164 – ஜோ ரூட்
4146 – விவ் ரிச்சர்ட்ஸ்
4107 – விராட் கோலி

#INDvWI

13 ODI சதங்கள் அடிக்க குறைந்த இன்னிங்ஸ் எடுத்தோர் ?

76 – பாபர் ஆசம்
83 – ஹாஷிம் ஆம்லா
86 – விராட் கோலி
86 – குயின்டன் டி காக்
91 – டேவிட் வார்னர்
95 – ஷாய் ஹோப்*
99 – ஷிகர் தவான்

#INDvWI