100வது வெற்றியை பெற்றது இந்தியா, தொடர்ந்து கெத்து காட்டிய ரோஹித் சர்மா ..!

100வது வெற்றியை பெற்றது இந்தியா, தொடர்ந்து கெத்து காட்டிய ரோஹித் சர்மா ..!

இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இடம்பெற்று வருகிறது.

கொல்கத்தாவில் இன்று இடம்பெற்ற போட்டியில் 8 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை பெற்ற இந்திய அணி தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2_0 என வென்றது.

முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் தொடரை 3_0 என கைப்பற்றிய இந்தியா இப்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 தொடரையும் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் பான்ட் ஆகியோர் அதிரடி அரைசதம் அடித்தனர், வெங்கடேஷ் ஐயர் மிகப் பெறுமதியான ஒரு இன்னிங்சை ஆடினார். இந்தியா 186/5  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு 186 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதல் 2 விக்கெட்டுகளும் விரைவாக பறிக்கப்பட்டன, ஆயினும் மூன்றாவது விக்கட்டில் ஜோடி சேர்ந்த ரொவ்மான் பவல், பூரான் ஆகியோர் 62 பந்துகளில் சத இணைப்பாட்டம் புரிந்து இந்தியாவை நெருக்கடிக்கு தள்ளினர்.

இறுத  ஓவரில் 25 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஹர்ஷால் பட்டேல் 3,வது 4வது பந்துகளில் சிக்சர் விட்டுக் கொடுத்தாலும் இறுதியில் 8 ஓட்டங்களால் மிகச் சிறப்பான ஒரு வெற்றியை இந்தியா பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.

இந்த போட்டியின் வெற்றி இந்தியாவின் 100வது வெற்றியாக அமைந்துள்ளது. அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் பொல்லார்டின் 100 வது T20 போட்டியாகவும் அமைந்தது.

118 வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க, இரண்டாவது அணியாக இந்தியா 100வது வெற்றியை பெற்று அசத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகன் விருது பான்ட் வசமானது.