இலங்கை வந்தடைந்தது பாகிஸ்தான் A அணி -முழுமையான அட்டவணை விவரம் ..!

இலங்கை வந்தடைந்தது பாகிஸ்தான் A அணி -முழுமையான அட்டவணை விவரம் ..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு பாகிஸ்தான் A அணி இன்று இலங்கை சுற்றுலா மேற்கொண்ட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் கண்டியில் இடம்பெறவுள்ளது, 3 உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளும் இந்த அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்கள் கொண்ட இரண்டு உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டிகள் கண்டியில் இடம்பெறும் ஆனால் ஒருநாள் போட்டிகள் எங்கு இடம்பெறும்.

ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி இன்று பாகிஸ்தான் A அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கை A அணி சதீர சமரவிக்ரம தலைமையில் விளையாடவுள்ளது.

????

இலங்கை ‘A’ அணி விபரம்:

சதீர சமரவிக்ரம (தமிழ் யூனியன், கேப்டன்),நிஷான் மதுஷ்க (ராகம சிசி), லஹிரு உதார (என்சிசி), லசித் குரோஸ்புல்லே (சிலாவ் மரியன்ஸ் சிசி), கமீல் மிஷாரா (என்சிசி), ஓஷாத பெர்னாண்டோ (சிலாவ் மரியன்ஸ் சிசி), நுவனிடு பெர்னாண்டோ (எஸ்எஸ்சி), நிபுன் தனஞ்சய (எஸ்எஸ்சி), சஹான் ஆராச்சிகே (என்சிசி), சம்மு அஷான் (எஸ்எஸ்சி), லசித் அபேரத்னே (சிசிசி), தனஞ்சய லக்ஷன் (கோல்ட்ஸ், உடற்தகுதிக்கு உட்பட்டது), கலனா பெரேரா (SSC), ஷிரான் பெர்னாண்டோ (தமிழ் யூனியன்), முகமது ஷிராஸ் (BRC, உடற்தகுதிக்கு உட்பட்டது), அசித பெர்னாண்டோ (சிலாவ் மேரியன்ஸ் CC), ஹிமேஷ் ராமநாயக்க (SSC), விஷ்வா பெர்னாண்டோ (CCC), சுமிந்த லக்ஷன் (SL இராணுவ SC), லசித் எம்புல்தெனிய (என்சிசி), ஆஷேன் டேனியல் (என்சிசி), மற்றும் துவிந்து திலகரத்ன (பிஆர்சி).

பாகிஸ்தான் ‘A’ சுற்றுப்பயணம்
* 28-31 அக்டோபர்: பல்லேகலேயில் முதல் 4-நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்

* 4-7 நவம்பர்: பல்லேகலேயில் 2 வது 4-நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்

* 10 நவம்பர்: முதல் அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி- தம்புள்ளை

* 12 நவம்பர்: 2 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி -தம்புள்ளை

* 15 நவம்பர்: 3 வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி -தம்புள்ளை

 

 

Previous articleடி20 உலகக்கோப்பை: புதியா சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்
Next articleநெதர்லாந்தை துவம்சம் செய்து சாதனை வெற்றி பெற்றது இலங்கை..!