தூக்கத்திலிருந்த நடுவர்கள், No ball ல் ராகுலுக்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு, ட்விட்டரில் வெடிக்கும் சர்ச்சை..!

தூக்கத்திலிருந்த நடுவர்கள், No ball ல் ராகுலுக்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு, ட்விட்டரில் வெடிக்கும் சர்ச்சை..!

ஐசிசி t20 உலகக்கிண்ண போட்டிகளின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் மிகப் பெரிய சர்ச்சை ஒன்று சமூக வலைத்தளங்களில் வெடித்திருக்கிறது.

குறிப்பாக இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா முதலாவது ஓவரிலேயே கோல்ட்டன் டக் முறை மூலமாக ஷஹீன் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அதன் பின்னர் வீசிய இரண்டாவது ஓவரில் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது, ராகுலுக்கு வீசப்பட்ட பந்து நோ போலாக வீசப்பட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் அடிப்படையில் No Ball தீர்மானிக்கும் உரிமை , நடைமுறை மூன்றாவது நடுவரிடம் ( TV Umpire) இருக்கிறது.

அவரே அந்த நொடியில் பந்தை சரியாக கணித்து கள நடுவருக்கு No Ball என அறிவிக்க வேண்டும் என்பதே விதிமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் ராகுலை நோக்கி வீசப்பட்ட பந்து No Ball ஆக வீசப்பட்ட நிலையில் ஏன் அதற்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது என சர்ச்சை வெடித்திருக்கிறது.

Twitter பதிவுகளை கீழே பாருங்கள் ????

 

 

 

Previous articleமைதானத்தில் அடித்துக்கொள்ள பார்த்த இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள். பதிலடி கொடுத்த அசலங்க, பானுக..! (காணொளி இணைப்பு)
Next articleவரலாற்றை மாற்றி எழுதியது பாகிஸ்தான்- #INDvPAK அணிகளுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பாகிஸ்தான் வசம் ..!