அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர் .!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர் .!

அவுஸ்திரேலிய இளையோர் உலகக் கிண்ணத்துக்கான அணியல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளார் .

தமிழகத்தில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிவேதன் ராதாகிருஷ்ணன் எனும் இளம் வீரர், அடுத்தாண்டு மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உலகக்கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளன, இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய அணியில் ராதாகிருஷ்ணன் எனும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் ரஷ்மானியாவில் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி வரும் நிவேதன் ராதாகிருஷ்ணன், இரு கைகளாலும் பந்துவீசும் அபரிமிதமான ஆற்றலை கொண்டவர்கள் என்பதும் சிறப்பம்சமாகும்.

2013ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்ரேலியாவின் பிரபலமான Tasmania கழத்துக்காக முதல் தர போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரராகவும் சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படும் நிவேதன்,IPL டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நெட் போலராகவும் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நிவேதன் ராதாகிருஷ்ணன் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க எங்கள் இனிய வாழ்த்துகள்.