12 ஆண்டுகளாக இங்கிலாந்து கால்பந்து அணியின் தக்க வைத்திருக்கும் சாதனை விபரம் ..!
இங்கிலாந்து கால்பந்து அணி நேற்று இடம்பெற்ற கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டியில் மிக இலகுவாக 4-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கிறது.
12 ஆண்டுகளாக கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளில் இங்கிலாந்து கால்பந்து அணி தோல்வியைத் தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்ற உக்ரைன் அணியுடனான கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டியில் தோல்வியை தழுவிய பின்னர், மொத்தம் 24 ஆட்டங்களில் இங்கிலாந்து கால்பந்து அணி விளையாடியுள்ளது, இதில் 18 வெற்றிகள் 6 சமநிலை (Draw) முடிவுகள் கிடைத்தன.
எந்த ஒரு போட்டியிலும் இங்கிலாந்து கால்பந்து அணியை, உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் எந்த அணியாலும் இதுவரை தோற்கடிக்க முடியாத நிலை தொடர்கிறது.
ஹரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.
யூரோ கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவி இருந்தவையும் இங்கே நினைவுபடுத்ததக்கது.