13 பந்துகளில் அரைச்சதமடித்த சுனில் நரேன்..! (வீடியோ இணைப்பு)

மேற்கு இந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் புதன்கிழமை கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக 13 பந்துகளில் அரைசதம் அடித்து வங்கதேச பிரீமியர் லீக் (BBL) ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

இதன்முலம் நரேன் T20 வடிவத்தில் இரண்டாவது அதிவேக அரைசதம் அடித்தார், இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் பட்டியலில் முன்னணியில் காணப்படுகின்றார்.

மிர்பூரில் உள்ள ஷேர் பங்களா ஸ்டேடியத்தில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியை கொமிலா விக்டோரியன்ஸ் எதிர்கொண்டது. வங்கதேசத்தில் நடந்த டி20 லீக்கின் இரண்டாவது தகுதிச் சுற்று இதுவாகும்.

கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் இன்னிங்ஸைத் துவக்கிய நரேன், சில அற்புதமான சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்தார், விரைவாகவே தனது அரைசதத்தை பூர்திசெய்தார்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய விக்டோரியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் எட்ட, மொத்தம் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை நரேன் விளாசினார். அவரது முழு இன்னிங்சிலும், நரேன் இரண்டு டாட் பால்களை மட்டுமே விளையாடினார். அந்த பந்துகள் Dot ball ளாக இல்லாவிட்டால், மூத்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் உலக சாதனையை முறியடித்திருக்க முடியும்.

சுனில் நரைன் இன்னிங்ஸ் சுருக்கம்: 0, 6, 4, 4, 6, 6, 4, 6, 0, 4, 6, 1, 6.

டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதங்கள் (சர்வதேச மற்றும் உள்நாட்டு):

1. யுவராஜ் சிங்: 12 பந்துகள் – 2007ல் இந்தியா vs இங்கிலாந்து

1. கிறிஸ் கெய்ல்: 12 பந்துகள் – 2016 இல் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்

1. ஹஸ்ரதுல்லா ஜசாய்: 12 பந்துகள் – 2018 இல் காபூல் ஸ்வானன் vs பால்க் லெஜண்ட்ஸ்

2. மார்கஸ் ட்ரெஸ்கோதிக்: 13 பந்துகள் – 2010 இல் சோமர்செட் vs ஹாம்ப்ஷயர்

2. சுனில் நரைன்: 13 பந்துகள் – 2022 இல் கொமிலா விக்டோரியன்ஸ் எதிராக சட்டோகிராம் சேலஞ்சர்ஸ்

வீடியோ இணைப்பு.