13 வயதில் தங்கம்: ஸ்கேட்போர்டிங்கில் அசத்திய ஜப்பான் சிறுமி

13 வயதில் தங்கம்: ஸ்கேட்போர்டிங்கில் அசத்திய ஜப்பான் சிறுமி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்டிங் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்திருக்கிறார் ஜப்பானையைச் சேர்ந்த நிஷியா மோமிஜி.

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஸ்டீரிட் ஸ்கேட்போர்டிங் விளையாட்டு போட்டிகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றன. இதில் பெண்கள் பிரிவில் 13 வயதேயான நிஷியா மோமிஜா
தங்க வென்றார். இதே போட்டியில் பிரேசிலை சேர்ந்த 13 வயதான ரைய்ஸ்சா லில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெண்கல பதக்கத்தை ஜப்பானைச் சேர்ந்த 16 வயதான நகயாமா ஃபுனா வென்றார்.

இந்த தங்கப் பதக்கம் வென்றது மூலம் ஒலிம்பிக்கில் மிக இளம் வயதில் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமை நிஷியாவுக்கு கிடைத்துள்ளது.

13 வயதில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இளம் வீராங்கனைகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.