13 Years of VK :
எல்லா மனுஷனுக்கும் காலம்
ஒரு கட்டத்தில் கஷ்டத்தைக் கொடுக்கும், அதைத் தாண்டி வந்து சாதிக்கும் போது அவங்க லெஜண்ட்டா மாறுவாங்க.
கோலி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை, சதங்களின் மாஸ்டர், சீரிஸுக்கு 2 செஞ்சரி, 2 அரைசதம், சீரிஸ் டாப் ரன் ஸ்கோரர், இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துட்டு வந்த விஷயம்.
2020ல இருந்து அரை சதங்கள், சதங்களாக, கன்வர்ட் ஆகல, பிரஷர் கொஞ்சம் கொஞ்சமா ஏற ஆரம்பிக்குது.
கோலி சதம் அடிச்சுப் பார்த்தே பழகிட்டோம், அது நடக்கலங்கிறப்ப அவரை நோக்கிக் கேள்விக் கணைகள் எழுது, கோலி பழைய ஃபார்ம்ல இல்லையா, திணறுகிறாரா, டாமினேஷன் முடிவுக்கு வருதான்னு.
இன்னொரு பக்கம் நியூஸிலாந்து, இங்கிலாந்து மாதிரி நாடுகளில் ஸ்விங் பந்துகளுக்குத் திணறுகிறார், வலியப் போய் அவுட் சைட் ஆஃப் தி ஸ்டெம்ப் பந்தைத் தொட்டு அவுட் ஆகிறார், தொடர்ந்து அவுட் ஸ்விங் போட்டு, எதிர்பாராமல் ஒரு இன்ஸ்விங் போட்டா, எல்பிடபிள்யூ ஆகுறார். அவ்வளவுதான் கோலின்னு ஒருபக்கம் பேச்சு ஓடுது.
13 வருஷத்துல, 23 ஆயிரம் ரன் அடிச்சுக் குவிச்சவர் மேல, இப்ப சந்தேகக் கண்கள் வட்டமிட்டுருக்கு, இனிமேல் அதே வேகம் இருக்குமா, அதே ரன் மெஷினா இருப்பாரான்னு?!
கோலி இந்தச் சந்தேகக் கண்களின் பார்வையில் இருந்து மீண்டு வரணும்னா, சச்சினோட சிட்னி 241 இன்னிங்க்ஸ் மாதிரி ஒரு இன்னிங்க்ஸ் ஆடனும்.
“எவ்வளவு தடவைனாலும் ஆஃப் ஸ்டெம்ப் லைன்ல போடுறா, நான் ஷாட்டுக்குப் போகவே மாட்டேன்”,னு அவர் ஈகோவைத் தூக்கிப் போட்டு, சச்சின் எப்படி விடாப்பிடியா நின்னு, ஒரு மஜா இன்னிங்க்ஸ் ஆடுனாரோ, அதேமாதிரி கோலியும், ஒரு இன்னிங்க்ஸ் ஆடி, சதம் அடிச்சா மொத்த நம்பிக்கையும் திருப்பி வந்துரும்.
அவருக்கு இருக்க ஃபிட்னஸுக்கு, இன்னும் 4,5 வருடங்கள் ஆடுவார். அதுக்குள்ள டி20, 50, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடிச்சுட்டு, ரிடையர்ட் ஆனார்னா, இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் கம் ஸ்டார் பேட்ஸ்மேனா, சரித்திரத்தில் தன் பெயரை, பெருசா எழுதிட்டுப் போகலாம்.
பிகு : 70வது செஞ்சரி அடிச்சப்ப எடுத்த போட்டா இது , அடுத்த ஒரு செஞ்சரி அடிச்சு பேட்டை தூக்க ஒன்றை வருஷமா காத்துட்டு இருக்கார் . சீக்கிரம் அடிச்சு தூக்குயா விராட்டே ❤️
#அய்யப்பன்