மந்தனாவின் மிரளவைக்கும் பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு)

மந்தனாவின் மிரளவைக்கும் பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு)

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவன் அணிக்கு திரும்பிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைனை ஒரு அற்புதமான கேட்ச் மூலம் ஆட்டமிழப்பை  ஏற்படுத்தினார்.

நான்காவது ஒருநாள் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஆகியோருக்கு ஓய்வளிக்க இந்தியா முடிவு செய்தது.

முதல் 3 போட்டிகளிலும் அணியில் இணைத்துக் கொள்ளப்படாத மந்தனா, இன்றைய நான்காவது போட்டியில்  அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரு வாரங்களுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இன்றைய போட்டியிலும் நியூசிலாந்து வெற்றிபெற்று தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது.

வீடியோ இணைப்பு ?