14 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி RCB அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 பதிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இன்று நடைபெற்ற பரபரப்பான குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரஜத் படிதார் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அணித்தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ் 25 , கிளென் மேக்ஸ்வெல் 24  பெற்றனர்.

பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது நான்காவது சதத்தை அடித்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள், சஞ்சு சாம்சன் 23 ரன்கள் குவித்தார்.

 

ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

?IPL


YouTube காணொளிகளை பாருங்கள் ?