14 லீக் ஆட்டம் முடிந்த நிலையில், டாப் 10 ஸ்கோர் அடித்த வீரர்கள் யார்?
ஐபில் 2025 ஆம் ஆண்டு சீசனில் வழக்கம் போல் பேட்ஸ்மேன் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஐபிஎல் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் அதற்குள் சதம், அரை சதம் என வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டில் அரை சதம் அடிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். இதனால் வீரர்களின் புள்ளிவிவரங்களை குறிக்கும்போது, ஒரு வீரர் 30 ரன்னை எவ்வளவு முறை அடித்திருக்கிறார்.
50 ரன்கள் எவ்வளவு முறை அடித்திருக்கிறார் என்று தான் தொலைக்காட்சிகளில் ஆரம்பகாலத்தில் காட்டப்படும். ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலும் மாறி வருகிறது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் பௌலர்களின் பங்கு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. ஆடுகளமும் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறிவிட்டதால், தற்போது பேட்ஸ்மேன்கள் சுலபமாக அரை சதம் சதம் என அடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 14 லீக் ஆட்டம் தற்போது முடிவடைந்து இருக்கிறது. கொல்கத்தா ஆர்சிபி அணி போட்டியை நீங்களாக இந்த தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் அடித்த டாப் 10 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இஷான் கிஷன். இந்திய அணியில் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் இசான் கிஷன் போராடி வருகிறார். ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் இசான் கிஷனுக்கு ஐபிஎல் தொடர் தான் ஒரு சிறந்த வாய்ப்பு. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட இசான் கிசன் இம்முறை தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார்.
சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 47 பந்துகளில் 106 ரன்களை விளாசினார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 225 என்ற அளவில் இருந்தது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் இருக்கிறார். கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாப் அணிக்கு வந்தார். ஸ்ரேயாஸ் வந்த பிறகு பஞ்சாப் அணியே முற்றிலும் புதிய புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறார்கள். மேலும் அணிக்கு முன் நின்று தலைமை தாங்கி வரும் ஸ்ரேயாஸ், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 230 என்று அளவில் இருந்தது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் குயிண்டன் டி காக். தற்போது கே கே ஆர் அணிக்காக விளையாடுகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குயின்டன் டிகாக் 61 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார் இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரைட். 159 என்ற அளவில் இருந்தது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் நிதிஷ் ரானா. நிதிஷ் ரானா கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக இருந்தவர். ஒரு கட்டத்தில் கேப்டன் ஆகவும் செயல்பட்டு இருக்கிறார். இந்த தருணத்தில் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி அவரை தேர்வு செய்தது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் நிதிஷ் ராணா 36 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் கொடுமை என்னவென்றால் ஐபிஎல் மெகா ஏலத்தின் போது நிதிஷ் ராணா ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி போராடியது. நிதிஷ் ரானாவுக்காக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை வழங்கினார்கள். அதன் பிறகு பணத்தை செலவு செய்யாமல் சிஎஸ்கே அணி பின் தங்கி விட்டார்கள். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் நிக்கோலஸ் புரான். லக்னோ அணியில் தனி ஆளாக நின்று பேட்டிங் செய்து வருகிறார்.
பூரானின் அதிரடி எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. ஆனால் மற்ற லக்னோ வீரர்கள் சொதப்புவதால் பூரானின் பேட்டிங் வெற்றிக்கு வழி வகுப்பதில்லை. கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக வீரர் சாய் சுதர்சன். சாய் சுதர்சன் கடந்த சில காலமாக காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் தொடரின் அதிரடியாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணிக்கு இடம் பிடிக்க சாய் சுதர்சன் போராடி வருகிறார்.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதனால் சாய் சுதர்சன் மீண்டும் இந்திய அணிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் சன்ரைசர்ஸ் வீரர். அங்கீட் வர்மா. தன்னுடைய திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வருகிறார். சிக்ஸர் பௌண்டரி என நொறுக்கும் இவர் டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தை இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் பிடித்திருக்கிறார்.
ஜாஸ் பட்லருக்கு கடந்த சில மாதமாகவே கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தவித்து வந்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்லர் பெரிய அளவு சாதிக்கவில்லை. மேலும் இங்கிலாந்து முதல் சுற்றிலே வெளியேறியதால் தமது கேப்டன் பதவியும் ராஜினாமா செய்தார். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளிலும் அவர் பெரிய அளவு ரன் குவிக்கவில்லை.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 39 பந்துகளில் 73 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இந்தப் பட்டியில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ். காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மார்ஸ் 36 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் நிக்கோலஸ் பூரான். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 269 ஆகும். இந்த டாப் 10 இடத்தில் மட்டும் பூரான் இரண்டு முறை இடம் பிடித்திருக்கிறார். இதன் காரணமாக தற்போது அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு கோப்பை தற்போது நிக்கோலஸ் பூரானிடம் இருக்கிறது. பூரான் 189 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் சாய் சுதர்சன் 186 ரன்களுடன் இருக்கின்றார்.