பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது ஆஸி!

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய  அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. கவாஜா 91, கிரீன்79, அலெக்ஸ் கேரி 67, ஸ்மித் 59 ஓட்டங்களை எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அப்துல்லா ஷபிக் 81 , அசார் அலி 78 , கேப்டன் பாபர் அசாம் 67 ஓட்டங்களை எடுத்தனர்.
அஸ்திரேலியா சார்பில் பட் கம்மின்ஸ் 5 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினர்.
123 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற அவுஸ்திரேலியா, 2வது இன்னிங்சில் 60 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்து 104 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 51 ஓட்டங்களை பெற்றார்.
இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 351 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்களை எடுத்தது.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் வெற்றி பெற 278 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.
இதனால், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப் போனது  இமாம் உல் ஹக் 70 ரன்னும், பாபர் அசாம் 55 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லின் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0  என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.
ஆட்டநாயகன் விருது பாட் கம்மின்சுக்கும், தொடர் நாயகன் விருது உஸ்மான் கவாஜாவுக்கும் வழங்கப்பட்டது.
இதேவேளை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 29-ம் திகதி லாகூரில் நடைபெற உள்ளது.