145 ஆண்டுகால டெஸ்ட் உலக சாதனையை தவறவிட்ட இலங்கையின் இளம்வீரர்…!

145 ஆண்டுகால டெஸ்ட் உலக சாதனையை  தவறவிட்ட இலங்கையின் இளம்வீரர்…!

1877ஆம் ஆண்டு தொடங்கிய உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 145 வருடங்கள் பழமையான உலக சாதனையை பாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா தவறவிட்டார்.

அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் இருந்து தொடர்ந்து 4 தடவைகள் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையே அதுவாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், டெஸ்ட் அறிமுகம்பெற்ற பிரபாத் ஜெயசூர்யா, அவர் வீசிய முதல் இன்னிங்ஸில் 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்த முடிந்தது.

இரண்டாவது இன்னிங்சில் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டி முழுவதும் 177 ரன்களுக்கு 12 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதன் பின்னர் ஆரம்பமான பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியில் மீண்டும் பிரபாத் ஜயசூரிய, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் 82/5 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றுமொரு 5 விக்கெட் வாய்ப்பை பதிவு செய்ய முடிந்தது.

145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், எந்த ஒரு பந்து வீச்சாளராலும் தான் வீசிய முதல் 4 இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

ஆனால் பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்சில் பிரபாத் 135 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதை நெருங்கினார். 145 வருட கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான சாதனையை பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக தவறவிட்டார் என்பதுதான் கவலைக்குரியது…!