சம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து!

நசுவிஸ் ஒபன் பட்மிண்டன் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்ற இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனை எதிர்த்து விளையாடினார்.

49 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்வென்றார்.

முதல் செட்டில் போராடிய பூசனன், 2-வது செட்டில் சிந்துவின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.